இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் சந்தோசமாக வாழ சில குறிப்புகள் தருகிறேன்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி | How to be happy in tamil
வாழ்க்கையில் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முயலாது ஏனெனில் ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதில் நல்லது கெட்டது என்று இருக்கும் அதுபோல் தான் வாழ்க்கையில் துன்பம் மற்றும் இன்பம் இருக்கும்.
ஆனால் நாம் மேலும் சந்தோஷமாக வாழ சில குறிப்புகளை என்னால் முடிந்தவரை தருகிறேன்.
- நம்பகத்தன்மை
- மனதில் உள்ளதை பேசுங்கள்
- எளிதில் யாரையும் நம்பாதீர்கள்
- நல்ல நண்பர்கள்
- பிடித்த வேலையை செய்ய வேண்டும்
- சிரிக்க வேண்டும்
நம்பகத்தன்மை
முதலில் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் யாரையும் அவ்வளவு சுலபத்தில் நம்ப கூடாது ஏனெனில் அவர்கள் உங்களை ஏமாற்றினாலும் அல்லது உங்களை விட்டு பிரிந்து சென்றாலும் அவர்கள் பிரிவானது அல்லது ஏமாற்றமடைந்து உங்கள் மனதில் அதிக அளவில் பாதிக்கக்கூடும்.
அதனால் தான் யாரையும் எளிதில் நம்பி விடக்கூடாது என்று பெரியவர்கள் முதல் அனைவரும் கூறுகின்றனர்.
அதேபோல் நீங்கள் உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் மற்றும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இடமும் நீங்கள் நம்பாமல் இருந்தாள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த மனிதரையோ அல்லது உங்கள் வாழ்க்கையை அன்பிற்காக வரும் நபரையோ இழப்பீர்கள்.
எனவே எளிதில் யாரையும் நம்பாதீர்கள் மற்றும் உங்கள் மீது உண்மையான அன்பு வைத்திருப்பவர்களை மனதளவில் நம்புங்கள்.
மனதில் உள்ளதை பேசுங்கள்
நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நீங்கள் அதனை பெரிதளவில் மனதில் போட்டுக்கொண்டு செய்ய வேண்டாம் ஏனெனில் எதையும் மனதில் அப்படியே வைத்திருந்தால் அது மிகவும் அபாயகரமானதாக மாறிவிடும்.
இனிமே உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே வெளிப்படையாக சொல்லி விடுங்கள் யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றே நினைத்து வாழுங்கள்.
யாரையும் எளிதில் நம்பாதீர்கள்
எளிதில் யாரையும் நம்பாதீர்கள் மற்றும் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசினாலே உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் தானாக வரக்கூடும்.
இதை நான் எப்படி உறுதியாக கூறுகிறேன் என்றால் நீங்கள் இப்படி இருக்கும் இருக்கும் எனில் நீங்கள் அனைவரிடத்திலும் உண்மையாக மற்றும் வெளிப்படையாக இருக்கக் கூடும் அதனால் அவர்களுக்கு உங்களை தானாக பிடித்துவிடும் மட்டும் நீங்களும் மற்றவர்கள் இடத்தில் சந்தோஷமாக இருப்பீர்கள்.
நல்ல நண்பர்கள்
எப்பொழுதும் நண்பர்கள் கூட இருந்தால் நாம் மிகவும் சந்தோசமாக இருப்போம். அதுவும் உங்களை பிடித்த மற்றும் உங்கள் மீது பாசமாக உள்ள நண்பர்களுடன் இருங்கள்.
நண்பர்கள் உங்களுக்கு புதிது புதிதாக கற்றுத் தருவார்கள் மற்றும் அந்த அனுபவம் எல்லாம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்க கூடும்.
பிடித்த வேலையை செய்ய வேண்டும்
நம் வாழ்க்கையில் ஒரு பொழுது நமக்கு பிடிக்காத வேலையை செய்யக் கூடாது. அப்படி செய்தால் அந்த வாழ்க்கை உங்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியைத் தராது.
நீங்கள் உங்களுக்கு பிடித்த வேலையை குறைந்த சம்பளத்தில் செய்தால் கூட அது மகிழ்ச்சி தரும் ஆனால் பிடிக்காத வேலையை அதிக சம்பளத்தில் செய்தால் கூட உங்களுக்கு ஒரு சொட்டு மகிழ்ச்சி கூட கிடைக்காது.
எனவே பிடித்த வேலையை செய்யுங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்.
சிரிக்க வேண்டும்
உங்களுக்கு எந்த ஒரு விஷயம் காமெடியாக இருந்தாலும் உங்கள் வாய் விட்டு சிரித்து விடுங்கள் சிரிப்பு தான் முதலில் மகிழ்ச்சிக்கு ஒரு முதல் படி.
எனவே எப்பொழுதும் செலுத்திவிடுங்கள் ஒரு நாளில் நீங்கள் சிரிக்கவில்லை என்றால் அந்த நாள் உங்களுக்கு இழப்பு தான்.
Conclusion - முடிவுரை
எனவே மக்களே நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள் மகிழ்ச்சி தான் நம் வாழ்க்கை நம் வாழ்க்கை ஒருமுறைதான் வாழப்போகிறோம் அதனால் எப்பொழுதும் உங்கள் மனதிற்குப் பிடித்த படி என்ன செய்ய தோணுதோ அதை மகிழ்ச்சியாக செய்யுங்கள்.
இந்த பதிவின் மூலம் உங்க வாழ்க்கை எப்படி மேலும் சந்தோஷமாக இருப்பது என்பதை பற்றி அறிந்திருப்பீர்கள் இந்த பதிவு போல் மேலும் பதிவுகள் படிக்க நம் இணைய தளத்தைப் தேடுங்கள்.
Related articles
அறிவை வளர்ப்பது எப்படி? How to improve knowledge in tamil?
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி? | How to improve self confidence in tamil
வெற்றியின் ரகசியம் - secret of success in tamil