Type Here to Get Search Results !

தமிழ் சிறுகதைகள் | Sirukathaigal in tamil

இந்தப் பதிவில் தர்மம் பற்றிய ஒரு சிறுகதை தான் இப்பொழுது காண போகிறோம். இந்தக் கதையில் தர்மம் எப்படி தலை காக்கும் என்பதை பற்றி கூறியுள்ளோம்.


Sirukathaigal in tamil

கதாபாத்திரங்கள்

  • ஜெகன்
  • கண்ணு தெரியாத பிச்சைக்காரன்

தர்மம் தலை காக்கும் - Sirukathaigal in tamil

தேனூர் என்ற ஊரில் ஜெகன் என்பவன் வாழ்ந்து வந்தான். இவனுக்கு சீட்டுக் கட்டுகள் விளையாட மிகவும் பிடிக்கும்.


ஒருநாள் அந்த ஜெகன் அவன் கிராமத்தில் சீட்டுக்கட்டு விளையாடி பத்து ரூபாய் ஜெயித்தான்.


அவன் இந்த பத்து ரூபா அவை தனது அடுத்த நாள் பயணத்திற்கு தேவை என எடுத்து வைத்துக் கொண்டான்.


அவன் ஒரு வேலை விஷயமாக பக்கத்து கிராமத்திற்கு செல்கிறான் அதற்குத்தான் அந்த பத்து ரூபாயை அவன் வைத்துக்கொண்டான்.


அதன்பின் மறுநாள் காலையில் ஜெகன் எழுந்து குளித்துவிட்டு சேரி நாம் பக்கத்து கிராமத்திற்கு செல்வோம் என்று முடிவெடுத்து வீட்டை விட்டு கிளம்பினான்.


இவன் பக்கத்து கிராமத்திற்கு செல்வதற்கு பஸ்சில் சென்றால்  பணம் அதிகமாக செலவாகும் என்று ரயிலில் செல்லலாம் என்று முடிவு எடுத்தான்.


அதனால் இவன் ரயில் நிலையத்திற்குச் சென்றான். அப்பொழுது ரயில் நிலையத்திற்கு முன் சில பிச்சைக்காரர்கள் இருந்தனர்.


இதனைக்கண்ட ஜெகன் மூன்று ரூபாய் அங்கே பிச்சைகாரர்களுடன் அமைந்திருந்த கண்ணு தெரியாத நபருக்கு கொடுத்தார்.


இவர் தட்டில் காசை போட்டதும் அந்த கண்ணு தெரியாத பிச்சைக்காரன் 3 ரூபாய் என்று சரியாகக் கூறினால் நன்றி ஐயா நீங்கள் நீண்ட நாள் வாழ்வீர்கள் என்று ஆசீர்வதித்து அனுப்பினான்.


அதன்பின் ஜெகன் இடம் மொத்தம் ஏழு ரூபாய் இருந்தது. அதனால் ரயில் கட்டணம் ஐந்து ரூபாய் எனவே மீதமுள்ள இரண்டு ரூபாய் வைத்து ஜெகன் டீ குடித்துவிட்டு ரயில் நிலையத்திற்கு உள்ளே சென்றான்.


ஜெகன் ரயில் நிலையத்திற்கு உள்ளே சென்றபின் ரயில் கட்டணம் ஆறு ரூபாய் என தெரியவந்தது.


ஆனால் இவனிடமும் 5 ரூபாய் மட்டுமே இருக்கின்றது அதனால் இவன் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் ஒரு முடிவு எடுத்தான்.


அந்த முடிவு என்னவென்றால் நாம் மூன்று ரூபாய் என ஒரு பிச்சைக்காரனுக்கு போட்டோமே அதில் ஒரு ரூபாய் எடுத்து விட்டு இரண்டு ரூபாயை அவனிடமே போட்டு விடலாம் என்று முடிவு செய்தான்.


இவன் தயங்கி தயங்கி அந்த பிச்சைக்காரரிடம் சென்று அவன் தட்டில் உள்ள மூன்று ரூபாயை எடுத்து இரண்டு ரூபாய் போட்டான்.


அந்த கண்ணு தெரியாத பிச்சைக்காரன் அதனை கண்டுபிடித்து விட்டான்.


என்ன ஐயா நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டவுடன், ஜெகனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் இவனிடம் உள்ள ஐந்து ரூபாயும் கண்ணு தெரியாத பிச்சைக்காரன் இடமே போட்டுவிட்டு அவனிடமிருந்து ஓடி வந்துவிட்டான்.


அதன்பின் இவனால் பக்கத்து கிராமத்திற்கு செல்ல இயலவில்லை.


இவனுக்கு வீட்டிற்கு சென்ற பின் ஒரு செய்தி கிடைத்தது.


நீ செல்லவிருந்த ரயில் ஒரு விபத்திற்கு உள்ளாகி விட்டது என்பதை கேள்விப்பட்ட இவன் பிச்சைக்காரன் கூறியபடியே நான் நீண்ட நாள் வாழ்ந்து விட்டேன்.


தர்மம்தான் என் தலையை காட்டதே என்று அவன் மன நிம்மதி பட்டான்.


Theme of the story

எனவே நீங்களும் தர்மம் செய்யுங்கள் தர்மம் ஒருநாள் அல்லது ஒரு நாள் கண்டிப்பாக உங்கள் உயிரைக் காக்கும் மற்றும் அது உங்கள் கஷ்டப்படும் நேரத்தில் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.


தர்மத்தினை எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யுங்கள் அதுவே உங்களை காக்க கூடும்.


Conclusion - இறுதி வார்த்தைகள்

பலர் சொல்வார்கள் தானம் தர்மம் நாம் நமக்கு பயனற்றது என்று கூறுவார்கள் அது அப்படி இல்லை. தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள் அது உண்மைதான்.


அது எப்படி என்று நீங்கள் கேட்டால் நீங்கள் ஒருவருக்கு உதவி செய்து இருப்பீர்கள் நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அவர் அந்த கஷ்டத்தை பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார் அதனால் தான் தர்மம் தலைகாக்கும் என்று கூறுவார்கள்.


உங்களுக்கே ஒருவர் கஷ்டப்படும் காலத்தில் உதவி செய்து இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அவர் கஷ்டப்படும் காலத்தில் உதவி செய்வீர்கள் அதனால் தான் அக்காலத்தில் உள்ள பெரியவர்கள் தர்மம் தலைகாக்கும் என்று கூறினார்கள்.


இந்த கதையின் மூலம் நீங்கள் தர்மத்தின் அவசியத்தை புரிந்திருப்பீர்கள் மற்றும் நான் தர்மத்தின் விளக்கத்தையும் உங்களிடம் கூறி உள்ளேன் இதனை மற்றவர்களுக்கும் சேர்த்து விடுங்கள்.


Sirukathaigal video in tamil


மரங்கள் பற்றிய தகவல்கள் | Tress in tamil

You have to wait 15 seconds.

please wait...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.