பிக் பாஸ் சீசன் 5 தற்போது தொடங்கி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை வழக்கம் போல் நமது உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி தாமதமாக துவங்கியதால் இம்முறையும் அதிக பண்டிகைகள் இல்லத்தில் கொண்டாடப்படும். தற்போது பிக்பாஸ் இல்லத்தில் 18 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். அதில் 7 ஆண்களும், 10 பெண்களும், ஒரு திருநங்கையும் விளையாடுகின்றனர். மேலும் பிக்பாஸ் இல்லத்தில் விளையாடும் போட்டியாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Bigg Boss Season 5 Tamil Contestants
1) Isaivani
2) Raja jeyamohan
3) Madhumitha
4) Abishek Raaja
5) Namitha marimuthu
6) Priyanka Deshpande
7) Abhinay Vaddi
8) Pavni
9) Chinnaponnu
10) Nadia Chang
11) Varun Kamal
12) Imman Annachi
13) Suruthi Jayadevan
14) Akshara Reddy
15) Iykki Berry
16) Thamarai Selvi
17) Ciby
18) Niroop
எனவே 100 நாட்கள் கொண்ட இந்த போட்டியில் 18 போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். முதல் வாரம் தவிர மற்ற அனைத்து வாரத்திலும் போட்டியாளர்களை வெளியேற்றும் நிகழ்வு நடக்கப்போகிறது. இறுதியாக கடைசி வாரம் ஐந்து போட்டியாளர்கள் மீதமிருக்கும் நிலையில் இறுதி வெற்றியாளர் யார் என்பதை வெளியிடுவார்கள். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் ஒருசில சண்டைகளும், அன்பு பரிமாற்றங்களும் நம்மால் பார்க்க முடிகிறது. இனிவரும் நாட்களிலும் பல சண்டைகளும், சோகங்களும், அழுகைகளும் நம்மால் பார்க்க இயலும். மேலும் இந்த வருடம் எந்த போட்டியாளர் வெற்றி பெறுவார் என்பதை பார்க்கலாம்.
how are you
ReplyDelete